விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ,தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் எனக் கூறி திராவிடம் முன்னேற்ற கழகம் பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சிவகாசியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கலந்து கொள்வதற்காக ராஜபாளையத்தில், இருந்து 15-க்கும் மேற்பட்ட வாகனத்தில், 300க்கும் மேற்பட்டோர் சென்று உண்ணாவிரதத்தில், கலந்து கொண்டனர். சுகந்தம் ராமகிருஷ்ணன் மாநில தொழில் பிரிவு செயலாளர் தலைமையில், ரமேஷ் ,தமிழ்ச்செல்வன், தமிழ், சேகர், கதிரேசன், தவசி, ராமசுப்பு, கதிரேசன், செங்கல்வராயன், உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் போராட்டத்தில், கலந்து கொள்ள வாகனங்களில் சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி