சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. (03.12.23)ம் தேதி பள்ளிதம்பம், புனித மூவரசர் தேவாலயம், (07.01.23)ம் தேதி காட்டூச்சூரை ஆரோக்கிய மாதா ஆலயம், (09.01.24) ம் தேதி கீழச்சேத்தூர் புனித லயோலா இந்நாச்சியார் ஆலயம் என தொடர்ந்து உண்டியல்களை உடைத்து திருட்டு நடைபெற்று வந்தது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.சரவணக்குமார், திரு.குகன் மற்றும் காவலர்கள் திரு.தெய்வேந்திரன், திரு.முருகவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் Scientific Method மூலமாகவும் Traditional Method மூலமாகவும் குற்றவாளியை தேடி வந்த நிலையில் குற்றவாளியை அடையாளம் கண்டு தொடர் திருட்டில் ஈடுபட்ட சுரேஷ் 37/27, த/பெ.வெள்ளக்கண்ணு, கோமளிப்பட்டி, சக்கத்தி போஸ்ட், சிவகங்கை என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட 10.26கிராம் தாலி(1 ¼ பவுன்) மற்றும் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர் திருட்டு பற்றி விசாரித்தபோது டிசம்பர், ஜனவரி மாதங்களில் தேவாலயம் மற்றும் கோவில் உண்டியல்களில் பணம் இருக்கும் என்பதால் திருடியதாக தெரிவித்துள்ளார். காளையார்கோவில் காவல் நிலையத்தினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் இதுபோன்ற திருட்டு மற்றும் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அர்விந்த், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி