திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (37). இவர்பழனி முருகன் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர் மூலம் தடை ஏற்படுத்தி உண்டியலில் விழும் பணம் அவர் ஏற்படுத்திய தடை பகுதியில் சேர்ந்துள்ளது. அந்த பணத்தை எடுக்க வந்த அவரை கண்காணித்த கோயில் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் இருந்து ரூ.5,200 பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா