திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு, கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் முகமதியாபுரம் பகுதியில் குளிர்பான கடையில் கெமிக்கல் கலந்த ஜிகர்தண்டா விற்பனை செய்ததை தொடர்ந்து 2 கடைகளில் இருந்து 75 லிட்டர் கெமிக்கல் ஜிகர்தண்டாவை பறிமுதல் செய்து இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா