விருதுநகர்: இராஜபாளையத்தில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். விருதுநகர், இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்ட அருகே பிரபல அசைவ உணவகமான தனியார் ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை, நகராட்சி சுகாதர அலுவலர் ஆகியோரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, தனியார் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது மற்றும் உணவு பொருட்களில் நிறத்திற்காக ரசாயன வண்ணங்கள் சேர்த்தது தெரியவந்தது. கெட்டுப்போன 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் ,தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர். இராஜபாளையம் பகுதியில், உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுகள் கிடைப்பதற்க்கு சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி