திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பழனி பிரதான சாலை ஓரங்களில் தினசரி மற்றும் வார இறைச்சி கடைகளில் கெட்டுபோன மீன், கோழி, ஆட்டுகறி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் 250 கிலோ கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, வசந்தன், ஜஸ்டின் அமல்ராஜ், சரவணன் ஆகியோர் திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த முருகபெருமாள் என்பவரது கடையில் 250 கிலோ கெட்டுபோன இறைச்சியை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் ரூ.5000 அபராத தொகையுடன் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.
மேலலும் 15 மீன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு நிர்னய சட்டம் 2006 கீழ் எச்சரிக்கையுடன் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 15 கடைகளில் சுகாதார மற்ற சூழ்நிலையில் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.2000 அபராத தொகை விதிக்கப்பட்டது. மேலும் இறைச்சி கடைகளில் பயன்படுத்தபடும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஷ்டிக் கவர் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் பறிமுதலுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா