மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில், கும்பாபிஷேக நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுவது எட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் சுற்றுப் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் செல்வராஜ் உத்திரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் கள் ராஜேந்திரன் , மோகன் ஆகியோர் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழரத வீதி, மேல ரதவீதி சன்னதி தெரு பகுதிகளில் உள்ள டீ கடை, வடை கடை, ஹோட்டல் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.
கலப்பட டீ தூள், வடை கடைகளில் பேப்பரில் வடை வழங்க கூடாது. இலை சில்வர் தட்டுகளில் மட்டுமே வடைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். கடைகளை சுகாதார மற்ற முறையில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திருவிழாக்காலங்களில் கடைகளில் கலப்பட பொருட்கள் எதுவும் விற்பனை செய்யாமல் தடுக்கவும், பொது மக்களுக்கு கலப்பட பொருட்களால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி