மதுரை: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைப்படி சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சுகாதாரதுறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு ஆணையர் லால் வினா ஆகியோரின் ஆலோசனைபடி, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்ட உணவு பாதுகாப்பு
துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்பரிந்துரையின்
படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயக்குமார், ராஜ்குமார், சந்திரமோகன் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில்உள்ள பெட்டி கடைகளில் புற்றுநோய், மலட்டுதன்மையை உருவாக்கும்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் தேசிய நான்குவழிச் சாலை பாலத்தின் கீழ் பகுதியில் சேவை சாலையில் மேட்டுதெருவை சேர்ந்த அய்யங்காளை மனைவி பாக்கியம்(வயது 55). என்பவரது பெட்டிக்கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. அதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்த போது 44 பாக்கெட்கள் கொண்ட ஒரு மூட்டை 9 கிலோ 900 கிராம் மதிப்பு ரூ.33ஆயிரமாகும். அதைக் கைப்பற்றி கடைக்கு
சீல் வைத்து வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரைமுருகன், ஏட்டு உக்ரபாண்டி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி