திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட அப்பளங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 5 கடைகளுக்கு தலா ரூ 5000 அபராதம் விதித்தனர். அதனைத் தொடர்ந்து புகையிலை விற்ற ஒரு கடைக்கு ரூ25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா