கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு, குட்கா பான்மசாலா விற்ற கடைகளுக்கு சீல். தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையாளர் லால்வேனா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு ஆகியோர் உத்தரவின்படி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். வெங்கடேசன் அறிவுரையின் பேரில், ஓசூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் தளி உணவுப்பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், ஓசூர் மாநகர காவல் துறையின் உதவி ஆய்வாளர் பிரபாகரன், போலிஸ் சிறப்பு நிலைக் காவலர்கள் செல்வராஜ், சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஓசூர் பஜார், உழவர் சந்தை ரோடு, பாகலூர் ரோடு மற்றும்ஓசூர் பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் பலசரக்கு மற்றும் பெட்டி கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டதில் சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. அதிலிருந்து சுமார் 1.5 கிலோ புகையிலைப் பொருட்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு பரிதோதணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்படி மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை தொடர்ந்து விற்று வந்த மூன்று கடைகளை மட்டும் மூடி பொதுமக்களுக்கு விற்பனை செய்யா வண்ணம் அதன் விநியோகம் முடக்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்