திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் ரோடு புதுப்பாலம் அருகில் உணவு கடை நடத்தி வரும் கீழஊருடையார்புரத்தை சேர்ந்த முருகன் (48) என்பவர் (08.09.2024) ஆம் தேதி வியாபாரம் முடித்து கிளம்பும் போது, அங்கு சாப்பிட வந்த டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற ரஞ்சன், மாடசாமி மற்றும் முருகன் ஆகியோரிடம் சாப்பிட எதுவும் இல்லை என்று கூறியதால் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், உணவுக் கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி, சைக்கிளை சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தச்சநல்லூர் காவல் துறையினர், டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்த நயினார் மகன் மாடசாமி (30). என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மற்ற இருவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்