மதுரை: மதுரை மாநகர எஸ். எஸ். காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலைவாணி , இவர், ரயில் நிலையம் , நேதாஜி ரோடு, காளவாசல், மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும், குளிரிலும் கொசுக்கடியில் படுத்து உறங்கிய ஆதரவற்ற நபர்களுக்கு தனது சொந்த செலவில் உணவும் , போர்வை வழங்கினார்.
இவரது மனிதநேயமிக்க சேவையை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள் . கொரோனா தொற்று முதலாம் அலையின் போது, இவர் சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது , கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.