திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவுபாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் பழனிரோடு,அண்ணா பொறியியல் கல்லூரி அருகில் உள்ள அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஐயங்கார் பேக்கரி கடையில் ஆய்வு செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் திண்டுக்கல் மெயின் ரோடு, பழனி ரோடு ஆகிய பகுதிகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கும் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா