திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NGO B காலனி பகுதியில் ஒரு உணவகத்தில் (02.09.2024)-ஆம் தேதி இரவு, வியாபாரம் முடித்து கடை அடைக்கும் நேரத்தில் உணவகத்திற்கு வந்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சுப்பையா மகன் ஆனந்த் சந்துரு (25). டக்காரம்மாள்புரத்தைச் சேர்ந்த பீட்டர் அந்தோணி மகன் ஜோசப் டேனியல் (24). மற்றும் பெருமாள்புரத்தை சேர்ந்த வெள்ளைப்பாண்டி மகன் செந்தமிழ் (25). ஆகிய மூன்று பேரும் சேர்ந்து உணவு கேட்டதாகவும், உணவு முடிந்து விட்டது என கூறியதனால் ஆத்திரமடைந்த அம்மூவரும் உணவக உரிமையாளரையும், ஊழியர்களையும் கைகளால் தாக்கி மிரட்டியதாக (24.09.2024) ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு செய்த பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர், கார்த்திகை குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்