தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (17.11.2025) தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுதீர் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
















