மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உசிலம்பட்டி அருகே கண்ணனூர்–புள்ளனேரி இரயில்வே பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்த அசோக் காரில் வந்தபோது அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.59,700 பணம் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கூட்டுறவு தணிக்கை அலுவலர் சதீஷ் பிரபு மற்றும் காவல்துறை எஸ்.எஸ்.ஐ. செல்வகுமாரி தலைமையில் செயல்பட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை உசிலம்பட்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















