மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷண்முகசுந்தரன் தலைமையில், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த பயிற்சி நடைபெற்றது. இதில், தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கை பேணும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், மனு திரும்பப்பெறும் கடைசி தேதி ஏப்ரல் 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா, உத்தப்பநாயக்கனூர், ஏழுமலை, எம். கல்லுப்பட்டி, டி. இராமநாதபுரம், வாலாந்தூர், செக்கானூரணி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















