மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் குறித்தும், எளிய முறை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
பட்டுப்பூச்சி வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணை, நெற்பயிரில் சொட்டு நீர் பாசனம், தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம், காளான் வளர்ப்பு, இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழிமுறைகள் காட்சி படுத்தப்பட்டன. உசிலம்பட்டி சந்தைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் ஆர்வத்துடன் வேளாண் மாணவர்களின் கண்காட்சியை கண்டு ரசித்த சூழலில், மாணவர்களும் ஒவ்வொரு செயல்முறைகளுக்கும் விளக்கம் அளித்தனர்., எளிய முறையில் இயற்கை விவசாயத்தை கண்காட்சி மூலம் எடுத்துரைத்த மாணவர்களை விவசாயிகளும் பொதுமக்களும் பாராட்டி சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















