இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் (12.01.2024)-ம் தேதி பொறுப்பேற்று, மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள், போதை பொருட்கள்/குட்கா விற்பனை குறித்த தகவல்கள் தெரிவித்தல் மட்டுமின்றி வருவாய்துறையினர் மூலம் நிவாரணம் பெறக்கூடிய பிரச்சனைகள், இளைஞர்களுக்கான எதிர்கால படிப்புகள் மற்றும் பணிவாய்ப்புகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் மூலம் இளைஞர்களை ஊக்குவித்தல், கிராமங்களில் போதிய புத்தகங்களுடன் கூடிய தேவையான நூலக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் ஆகிய இலக்குகளை மையமாகவும், பிரதானமாகவும் கொண்ட “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற புதிய திட்டத்தினை ஆரம்பித்தார்கள்.
அதன் ஒரு பகுதியாக, (30.01.2024)-ம் தேதி கமுதி உட்கோட்டம் சிங்கப்புளியாபட்டி, வெள்ளையாபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி அக்கிராம பகுதிகளில் இருந்து வரும் சூழ்நிலைகளை பற்றி அறிந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.மேற்படி திட்டத்தின் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய கிராமங்களுக்கும் சென்று ‘உங்கள் ஊரில் உங்கள் SP” திட்டத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு உரிய மேல்நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.