ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று எஸ்.பி., சந்தீஷ் பொதுமக்களிடம், “சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள், போதைப் பொருட்கள் குட்கா விற்பனை தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் கிராம மக்கள் வருவாய்த்துறை மூலம் நிவாரணம் பெறக்கூடிய பிரச்சனைகள் இளைஞர்களுக்கான எதிர்கால படிப்புகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்கி வருகிறார். மேலும் கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் மூலம் இளைஞர்களை ஊக்குவித்தல் போதிய புத்தகங்களுடன் கூடிய தேவையான நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய இலக்குகளை மையமாகவும் பிரதானமாகவும் கொண்ட நிகழ்ச்சிகளை உங்கள் “ஊரில் உங்கள் எஸ்.பி., ” என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக முதுகுளத்தூர் பகுதியில் காக்கூர்,புளியங்குடி மற்றும் செல்வநாயகபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்கள் முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி அக்கிரமப் பகுதிகளில் இருந்து வரும் சூழ்நிலைகளை பற்றிய அறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு எஸ்.பி., சந்தீஷ் நேரில் சென்று “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி.,” திட்டத்தை நடத்திட முடிவு செய்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி