சிவகங்கை : சிவகங்கை பாராளுமன்ற 2024 தேர்தல் அமைதியுடன் சரியான நேரத்தில் முடிவடைந்தது தொடர்ந்து காரைக்குடியில் இ.வி.எம்.மிஷின் பாதுகாப்புக்காக அனைத்து அறைகள் சீலிடப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு சிவகங்கை பாராளுமன்றம் 6 சட்ட மன்ற தொகுதி வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையம் இருக்கும் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.
அங்கு இ.வி.எம்.மிஷின் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து சீல் வைக்கபட்டது. மாவட்ட தேர்த்தல் அதிகாரி ஆஷா அஜீத் , சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் இ.கா.ப அவர்கள் ,காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் த.கா.ப அவர்கள் உதவி தேர்தல் அலுவலரும் தேவகோட்டை கோட்டாட்சியர் பால் துறை த.ஆ.ப அவர்கள் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி அவர்கள்
மற்றும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் அதனோடு பூத் முகவர்கள் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி