திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இ-சேவா கேந்திராக்களை மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி.முத்து சாரதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் தலைமை குற்றவியியல் நீதிபதி, திண்டுக்கல், மாவட்ட உரிமையியல் நீதிபதி, நிலக்கோட்டை, நீதித்துறை நடுவர் நிலக்கோட்டை, வட்டாட்சியர், நிலக்கோட்டை , காவல் துணை கண்காணிப்பாளர், நிலக்கோட்டை உட் கோட்டம், காவல் ஆய்வாளர், நிலக்கோட்டை, நிலக்கோட்டை அரசு வழக்கறிஞர், நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த இ-சேவா கேந்திரா மூலம் வழக்கறிஞர் மற்றும் பொதுமக்கள் எளிதாக வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், பொதுமக்கள் எளிய முறையில் வழக்கின் நிலை வாய்தா விவரம் வழக்கு சம்பந்தப்பட்ட இதர விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா