திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக பணகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் 2ஆவது முறையாக மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, திருநெல்வேலியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சென்று இஸ்ரோ மையத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனையிட்டனர். மேலும், மோப்பநாய் ஜாக்கு மூலமும் சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது புரளி என தெரியவந்தது. இதனை அடுத்து பணகுடி காவல் துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















