திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொலை, போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு அழகுபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தது தெரியவந்தது. இதுதவிர நேற்று முன்தினம் அழகுபாண்டி வேலை பார்க்கும் இடத்தில் சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா