மதுரை: கடந்த ஜூன் 14ஆம் தேதி காலை 9 மணி அளவில் தனது வேலை செய்யும் வெயிட்டிங் பட்டறைக்கு வேலைக்கு சென்றவர் இரவு 9 மணி வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த இவரின் மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீசார் செய்த சோதனையில் ஓம் முருகா நகர் அருகே உள்ள முள் புதரில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் முத்துக்குமார் உடன் வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய் (22) என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் வேலை செய்யும் இடத்திலேயே இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக விஜய் மற்றும் அவரது நண்பர்கள் பிச்சைமணி மகன் விக்னேஸ்வரன் (22) பாண்டி மகன் அருண்குமார் (21) ஆகியோர் கூட்டாக சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கி இருந்தது கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்களுடன் இன்னும் மூன்று பேர் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது எனவே அந்த 3 நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.