மதுரை: மதுரை மகபூப்பாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார் மகன் சையத் ஈசா 18. இவர் பழங்காநத்தம் விகேபி நகர் வயல்வெளி பகுதியில் காலி இடம் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
வீரா, அம்மையப்பன், மட்டைகம்பு சரவணன்,நந்தா என்ற நந்தகுமார் உட்பட பதினோரு பேர் சேர்ந்து தாக்கியதில் , இளைஞர் இறந்தது தெரியவந்தது.
பின்னர், வீரா,கார்த்திக்,லோகேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.மீதமுள்ள ஆறு பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் , வீராவின் தந்தையை கொலை செய்யப்பட்ட சையத் ஈசா சில நாட்களுக்கு முன்பு தாக்கி உள்ளார்.
இதை அறிந்த , வீரா நண்பர்களுடன் சென்று சையத் ஈசாவை கடத்திசென்று தாக்கிஉள்ளனர். இந்த தாக்குதலில், சைரத் ஈசா உயிரிழந்துள்ளார் என்பது , தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
கொலை நடந்த 24 மணி நேரத்தில், குற்றவாளிகளை கைது செய்த எஸ் எஸ் காலனி காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையாளர் திரு. பிரேம ஆனந்த் சின்கா பாராட்டு தெரிவித்தார்..