திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், கடைச்சிநேந்தல் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் மணி சங்கர் (20). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாலுகா காவல் ஆய்வாளர், சசிகுமார் மற்றும் சேரன்மகாதே காவல் ஆய்வாளர், தர்மராஜ் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி (24.03.2026) அன்று இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















