திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை, மாதா கோவில் தெருவை சேர்ந்த டால்டன் (31). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சைலஸ் (36). என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனை மனதில் கொண்டு (19.11.2024) அன்று டால்டன் இடிந்தகரை மேலத் தெருவில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த சைலஸ், நேரின்ஸ் (28). ராயப்பன் (62). ஆகிய மூவரும் டால்டனிடம் தகராறில் ஈடுபட்டு ஸ்க்ரூ டிரைவரால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து டால்டன் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கூடங்குளம் காவல் ஆய்வாளர், ரெகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைலஸ், நேரின்ஸ், ராயப்பன் ஆகிய மூவரையும் (20.11.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்