திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம் வயது (22). என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது காதலரான ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் இளைஞருக்கும் போனில் பேசும் பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கள் கிழமை காலை 11 மணியளவில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா