திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே இளங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மனைவி ஆதிலட்சுமி. (32). சற்று மனநலம் பாதித்தவர். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் வானுமாமலை தலைமையில் விரைந்து சென்று அப்பெண்ணை உயிருடன் மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்