தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் பிரியா 24. இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்பிய போது படுக்கையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. இதுதொடர்பாக போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.