குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. அந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதால் காவல்துறை கைது செய்யாமல் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது அரசியல் தலையீட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி இரு முக்கிய குற்றவாளிகளை விடுவிக்க காவல்துறையில் உள்ள ஒருசில அதிகாரிகள் பேரம் பேசி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கடந்த மூன்று நாட்களாக காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னரும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும் அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய குற்றவாளிகளில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருவரை விடுவிக்க உயர்மட்ட அளவில் நெருக்குதல்கள் உள்ளதாகவும் அதனால் முக்கிய குற்றவாளிகள் இருவரை விடுவிக்க காவல் துறை முக்கிய அதிகாரிகள் ஒரு சிலர் முடிவு எடுத்து உள்ளதால் கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை பாதிக்கப்பட்ட இளம்பெண் விடுவிக்க பட மாட்டார்.
என்றும் அந்தப் பெண்ணிடம் பேரம் பேசி முக்கிய நபர்கள் இருவர் அந்த வழக்கில் இல்லை என்று கூற வைக்க முயற்சிக்கவும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை எனில் மிரட்டி பணிய வைக்கவும் ஒரு சில காவல் அதிகாரிகள் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வழக்கில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆறு கடும் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி முடிந்த பின்னரும் அப்பெண் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது கசிந்த முக்கிய பிரமுகர்களை விடுவிக்க சதித்திட்டம் தீட்டும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக புகார் கொடுத்தும் தக்கலை போலீசார் மனு ரசீதோடு அந்த புகாரை முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இளம்பெண் புகார் கொடுத்ததை தெரிந்துகொண்ட அந்த புகாரின் குற்றவாளிகளில் புரோக்கரான ஜெபர்சன் வினிஷ் லால் தற்கொலை செய்து கொண்டதாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முக்கிய சம்பவங்களை கூட உளவுத்துறை கண்டு கொள்ளவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளா மாநிலம் கொச்சி அருகே பரவூர் சிறுமி பாலியல் வழக்கில் சுமார் 125 பேர் வரை அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் அதில் அப்போது குமரி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த சக்திவேல் என்பவர் சிக்கியதும் அதன்பின்னர் அவர் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதும்.
அதன் பின்னர் தமிழக காவல்துறையால் அவர் காவல்துறை பணியில் இருந்தே பணி நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து இளம் பெண்ணை மிரட்டிய தற்போதைய வழக்கில் முறையாக விசாரணை செய்யாமலும் இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் புகார் கொடுத்ததை தெரிந்து கொண்டதால் தற்கொலை செய்ததாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் கூட அது தற்கொலை அல்ல முழுமையான விசாரணை செய்தால் கொலை என்று மாறும் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் நம்பகமாக உள்ளது.
காரணம் இளம்பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்ததாக பலர் மீது புகார் கொடுத்த விபரம் தெரிந்தவுடன் அதில் முக்கிய நபரான ஜெபர்சன் வினிஷ் லால் மரணத்தால் முக்கியப் பிரமுகர்கள் பலரின் அரசியல் வாழ்வுக்கு இடையூறு ஏற்படாது என்ற எண்ணத்தில் அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெபர்சன் வினிஷ் லால் கொல்லப்பட்டிருக்கலாம்.
என்றும் அதன் பின்னர் அவர் கொல்லப்பட்ட வழக்கை மேற்படி இளம்பெண் மீதே சுமத்தி பாலியல் பலாத்கார வழக்கை முடித்துவிட முக்கிய குற்றவாளிகள் திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுவதை தற்போது கைது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் முக்கிய குற்றவாளிகள் இருவரை விடுவிக்க பேரம் நடைபெறுவதாக கூறப்படுவதன் மூலம் உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஆகவே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபாச படம் எடுத்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு என்பதை முழுமையாக விசாரிப்பதோடு அதில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஜெபர்சன் வினிஷ் லாலின் மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை சிறப்பாக புலனாய்வு செய்து முக்கிய குற்றவாளிகள் தப்பி விடாதபடி நடவடிக்கை எடுத்து இதுபோன்ற
சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமையவும் ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கி சிறையில் இருக்கும் காசி வழக்கில் பல முக்கிய பிரமுகர்கள் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு எழாமல் இருக்க இந்த பாலியல் வழக்கில் முறையாக நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெறவேண்டும்.
என்பதுடன் எந்த அதிகாரமிக்க முக்கியப் பிரமுகர்கள் ஆனாலும் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.