நெல்லை: நெல்லை மாவட்டம்,நாங்குநேரி அருகே உள்ள முத்துவீரப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் சேர்மக்கனி 35 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சேர்மக்கனி மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேர் மகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சேர்மக்கனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இவரது தாய் முருகம்மாள் 60,தங்கை அருணாச்சலம் 30 ஆகியோர் சேர்ந்து சேர்மக்கனியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.