செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் கிராமத்தில் எஸ்.டி.என்.பி வைணவ கல்லூரி முதுகலை சமூக பணித்துறை முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மக்கள் நல மையம் இணைந்து இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் இம்முகாமில் கண் நோய்கள், சா்க்கரை வியாதி, காது, மூக்கு, தொண்டை, தோல், சம்பந்தமான பிரச்னைகள் குழந்தைகளுக்கான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை எஸ்.டி.என்.பி வைணவ கல்லூரி முதுகலை சமூக பணித்துறை முதலாம் ஆண்டு மாணவிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில்பாலூர் ஊராட்சி மன்றம் தலைவர் நிர்மலா முத்து குமார்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்