திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. V. பிரசண்ண குமார், இ.கா.ப., உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினருக்கு அகர்வால் மருத்துவமனை மூலம் (25.02.26) அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்று சிறப்பு கண் மருத்துவர்கள் மூலம் தங்களுடைய கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கண் ஆரோக்கியம், பார்வை பாதுகாப்பு மற்றும் கண் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. காவல்துறையினரின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முகாம் சிறப்பாக அமைந்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















