தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பணியின் போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.