திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் குடியிருந்து வரும் சங்கரலிங்கம் (80). என்பவருக்கு மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாக கூறி, தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என வீடியோ கால் மூலம் பேசி வங்கி கணக்கு விபரங்களை பெற்றுக்கொண்டு இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளனர். அதை நம்பி மனுதாரர் 99 இலட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் மனுதாரர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து (23.09.2024)ஆம் தேதி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் சண்முகவடிவு, மற்றும் போலீசார் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















