புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நவநீத கிருஷ்ணன் மாடுமுட்டி இயற்கை எய்திவிட்டார். இறந்த காவலரின் உடலுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப அவர்கள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலமாக தோளில் சுமந்து எடுத்துச் சென்று மயானத்தில் காவல்துறையில் முழு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க காவலர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.