காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற எண்.15/2022-ல் கண்ட வழக்கில் தமிழ்சினிமா நடிகர் ‘கனா தர்ஷனின்’ புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு friend request அனுப்பி அதை அப்பெண் accept செய்தவுடன் நன்றாக பேசி பழகி அப்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணை பெற்று வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வீடியோகால் பேசி அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை screen shot எடுத்து வைத்துக்கொண்டு அப்பெண்ணிடம் பணம்கேட்டு மிரட்டியபோது பணம் தரமறுத்ததால் அப்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூகவளைதளத்தில் பகிரப்போவதாக பிரட்டி பணம் ரூ.2 இலட்சத்திற்கும் மேலாக பணத்தை Gpay மூலமாக பெற்றுகொண்டபிறகும், மேலும் பணம் கேட்டுமிரட்டியதாக கொடுத்த ஆன்லைன் புகார் சம்பந்தமாக கடந்த 08.10.2022 அன்று வழக்கு பதிவு செய்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யவேண்டி கனம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்களின் உத்திரவின்படி, திரு.S.பாலகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் பிரிவு அவர்களின் மேற்பார்வையில், திரு.M.இராஜகோபால், காவல் ஆய்வாளர், CCPS அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.L.சதீஷ், தலைமைக் காவலர் திரு.K.வெற்றிவேலன் மற்றும் காவலர்கள்திரு.N.C.ஜான் ஆல்பர்ட், திரு. C.அரிபிரசாத் ஆகியோர் சகிதம் தொடர்ந்து புலன்விசாரணை செய்து குற்றவழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1). அலாவுதீன் 27 த/பெ சாபுதீன், B.P. அக்ரஉறாரம், ஈரோடு 2). வாகித் த/பெ சாபுதீன், B.P. அக்ரஹாரம், ஈரோடு ஆகியோர்களை ஈரோடு சென்று 04.02.2023 அன்று கைது செய்து, குற்றம்புரிய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை கைப்பற்றி, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சைபர் குற்றவாளிகள் Fb, Insta, Twitter போன்ற சமூகவளைதள பக்கங்களை பயன்படுத்தும் திருமணமான பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை குறிவைத்து புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலங்களான கனா தர்ஷன், Youtuber VJ இரவி, லவ்டுடே ரங்கநாதன் போன்றோரின் புகைப்படங்களை வளைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அவர்களது பெயரிலேயே போலியான கணக்குகளை உருவாக்கி, போலியான நட்பை ஏற்படுத்தி தங்களது வலையில் சிக்கவைத்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று அவற்றை ஆபாசமாக மார்பிங்செய்து பெண்களின் நட்பு வட்டாரங்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சமூக வளைதளத்திலும் பகிர்வதாக மிரட்டி மோசடியாக பணத்தை பெற்றுவந்துள்ளனர்.
இவர்களது வலையில் சிக்கி பல குடும்பபெண்கள் தங்களது குடும்ப வாழ்க்கையை தொலைத்துள்ளனர். எனவே, பெண்கள் மற்றும் மாணவிகள் சமூகவளைதள பக்கங்களிள் பிரபலங்களின் பெயர்களிலோ மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்தோ வரும் அழைப்புகளையோ, friend request- களையோ ஏற்கவேண்டாம் என்றும் சமூகவளைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சைபர் கிரைம் உதவி எண்.1930 & வளைதளம் www.cybercrime.com