திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் அதிவேக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர் முருகன் உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சீலபாடியை மணிகண்டன், கண்ணன், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 அதிவேக இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா