திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பேசும் பழனியாண்டவர் கோவில் எதிர்புறம் திண்டுக்கல் – திருச்சி தேசிய 4 வழி சாலையில் சாலையை கடக்க முயன்ற தீர்த்தாக்கிழவனூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாப்பாத்தி(50). என்பவர் மீது இரு சக்கர வாகன மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா