திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை மணப்படைவீடு சிவன் கோவில் தெருவில் வசிக்கும் நல்லகண்ணு மகன் பாலசுப்பிரமணியம்(29). என்பவர் (15.10.2024)-ஆம் தேதி மார்க்கெட் அருகே நிறுத்தியிருந்த தன்னுடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், சங்கீதா அன்பு ஜூலியட் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, வழக்கு பதிவு விசாரணை செய்ததில் சம்பவத்தில் ஈடுபட்டது. பாளை மகாராஜா நகரை சேர்ந்த இசக்கிராஜா,(20). மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வசவபுரத்தை சேர்ந்த ஹரிசுப்பிரமணியன்,(20) என்பது தெரிய வந்ததை அடுத்து (19.10.2024) ஆம் தேதி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்