திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(27). இவரை, வள்ளியூர் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் நவீன் கைது செய்திருந்தார். மற்றொருவர்: கல்லிடைக்குறிச்சி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி- மிரட்டலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் மூலச்சி, தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் பிரசாந்த் (24). கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளர்கள் நவீன் (வள்ளியூர்), கலா (கல்லிடைக்குறிச்சி) ஆகியோர் அளித்த வேண்டுகோளை ஏற்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரைப்படி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவிட்டார். அதன் பேரில், மணிகண்டன், பிரசாத் இருவரும் பாளை. மத்திய சிறையில் (26.08.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்