அரியலூர் : அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1. ரமேஷ் 37. 2. முனியாண்டி ராஜா (48) ஆகிய இருவரை அரியலூர் நகர காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தின் உத்தரவுபடி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் .இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அரியலூர் காவல் நிலையத்தில் உள்ளது. இவர்கள் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று அரியலூர் நகர காவல் ஆய்வாளர் திரு. கோபிநாத் அவர்கள், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர் கணேஷ் அவர்கள் பரிந்துரை செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் மேல்பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி (24.11.2022) அதற்கான ஆணை பிரதிகள் சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.