திருநெல்வேலி மாவட்டம் 21.01.2022
தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் எதிரியான பாளையங்கோட்டை வட்டம், பாளையஞ்செட்டிகுளம், மேலத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் ஜஸ்டின் கோபிநாத்(32) என்பவர் அடிதடி மற்றும் திருட்டில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன்., இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாலுகா காவல் ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 21.01.2022 இன்று எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்,வள்ளியூர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் எதிரியான ராதாபுரம் வட்டம், வள்ளியூர், கீழத் தெருவை சேர்ந்த பச்சிக்கண்ணு என்பவரின் மகன் ராமசந்திரன் 51. என்பவர் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன்., இ.கா.ப., அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு. சாகுல் ஹமீது அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 21.01.2022 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.