கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் மோகன் என்பவர் கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக வேலை செய்து வருவதாகவும் நாகொண்டப்பள்ளியில் உள்ள கம்பெனிக்கு சொந்தமாக புதிதாக கட்டும் கம்பெனியில் கட்டுமானவேலை நடைபெறும் இடத்தில் இரும்பு ராடுகளை (02.11.2024) ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வைத்துவிட்டு (03.11.2024) ஆம் தேதி காலை சுமார் 06.00 மணிக்கு வேலை நடக்கும் இடத்திற்கு வந்து பார்த்தபோது வைத்திருந்த இரும்பு ராடுகளை காணவில்லை என அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து,தேடி பார்த்து யாரோ திருடி சென்று விட்டனர். என மோகன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து இரும்பு ராடுகளை திருடிய மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரும்பு ராடுகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்