திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகளின் குற்றவாளிகளின் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். கடந்த (11.07.2022)-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடக்கரையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெறப்பட்ட தகவலின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வளையல் வியாபாரம் செய்த பெண் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கின் குற்றவாளியான லால்குடி, கல்லக்குடியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த (12.09.22)-ந்தேதி மேற்படி குற்றவாளி நாகராஜ் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் மாண்புமிகு திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திரு.ஸ்ரீவத்சன் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து (20.12.2023)-ம்தேதி, மேற்படி குற்றவாளி நாகராஜ் என்பவருக்கு கொலை செய்த குற்றத்திற்கு ச/பி 302 IPC ன்படி ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.10,000/-ம் அபராதமும், கொலை செய்யும் நோக்கத்தோடு ஆள்கடத்தல் செய்த குற்றத்திற்காக ச/பி 364 IPC ன்படி 7 ஆண்டுகள் தண்டனையும் மற்றும் அபராதம் ரூ.5000/-ம், அபராதம் விதித்தும், சிறை தண்டனைகளை காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.ஜாகிர் உசேன் அவர்கள் ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார்கள். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் மேற்பார்வையில் பணிபுரிந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.