திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு C.N கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன்கள் ஆவுடைநாயகம் (68). மற்றும் ஸ்ரீதர் (66). அண்ணன் தம்பியாகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை வழக்கு ஒன்று உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் (02.05.2025) அன்று குடிநீர் குழாய் இணைப்பு சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் ஆவுடைநாயகம், மனைவி கோமு மகன்கள் வீரராகவன், கணபதிராமன், ஆகிய நான்கு நபர்கள் மீதும், எதிர் தரப்பினர் ஸ்ரீதர் மீதும் கொடுத்த புகாரின் பேரிலும் சந்திப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்