தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பாக பல்வேறு கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி நகர்ப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை அருகில் தொடங்கி அல்லிநகரம் வழியாக அன்னஞ்சி விலக்கு வரை சென்று மீண்டும் தேனி பழைய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.