திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே நவ்வலடியைச் சோ்ந்தவா் ஜெகன் (35). இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறார் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இந்த சிறுவன், மற்றொரு சிறுவன் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நவ்வலடி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இது தொடர்பாக, உவரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறார்களுக்கு இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய கடை உரிமையாளர் ஜெகனை கைது செய்தனர்.
(18). வயது பூர்த்தியடையாத, வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது பூர்த்தியடையாத இளவர்களை இது போன்று வாகனத்தினை ஓட்ட அனுமதித்து, அதனால் பிறரது உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதனை நன்கு அறிந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எவ்விதமான சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விலைமதிப்பற்ற மனிதர்களின் உயிர் மற்றும் உடல் பாதிப்பினை ஏற்படுத்தும் இச்செயலை தவிர்த்து, சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி.பிரசண்ண குமார், இ.கா.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















